குமுதம் வார இதழின் நிருபர் சந்துரு காலமாகி விட்டார். கடந்த பல வருடங்களாக திரையுலக செய்திகளை எழுதி வரும் இவரது மரணத்தை கேள்வியுற்ற அஜீத், அசோக் நகரில் இருக்கும் சந்துருவின் இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இதுபோன்ற மரணங்கள் நிகழும்போதெல்லாம் முதல் ஆளாக அஞ்சலி செலுத்த சென்று விடும் வழக்கம் உள்ளவர், இறுதி சடங்கிற்கு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஒரு சிறு தொகையை இறந்தவரின் குடும்பத்திற்கு வழங்கிவிட்டு வருவது வழக்கம்.
கனத்த இதயத்தோடும், துளிர்த்த கண்ணீரோடும் அன்றும் அப்படியே நடந்து கொண்டார் தல. இவரது வருகை பற்றி கேள்வியுற்ற அக்கம் பக்கத்து ரசிகர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்து அஜீத்தின் கைகளை பற்றிக் கொண்டு அன்பை தெரிவிக்க, அத்தனை சோகத்திலும் அவர்களை கோபிக்காமல் கார் ஏறினார் தல. இவரைப்போலவே ஓடோடி வந்த இன்னொரு பிரபலம் பிரகாஷ்ராஜ்.
சரத்குமார், ‘பிடிச்சிருக்கு’ அசோக் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து சந்துருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment